நடிகை ஸ்ரீதேவி(வயது 54.) துபாயில் நேற்று நள்ளிரவு திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது மறைவு இந்திய திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1963 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் தேதி விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஐயப்பன் -ராஜேஸ்வரி தம்பதிகளுக்கு மகளாக பிறந்தவர் நடிகை ஸ்ரீதேவி..அவருக்கு வயது 54. இவர், 1967ல்துணைவன் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, அதன் பின்னர் `கந்தன் கருணை, எம்ஜிஆருடன்;நம்நாடு சிவாஜிகணேசனுடன் ;வசந்தமாளிகைபோன்ற பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தார். பல படங்களில் குழந்தைநட்சத்திரமாக நடித்து வந்த இவரை 1976ஆம்ஆண்டு மூன்று முடிச்சு படம் மூலம்கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர்.இவர் அறிமுகமான முதல் படத்திலேயே கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் வெற்றி படமாக அமையவே இவரது சினிமாவாழ்க்கையில் பெரும் திருப்பம் ஏற்பட்டது.தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழியிலும் இவர் கதாநாயாகியாக உயர்ந்தார்.முன்னணி கதாநாயகர்கள் படங்களிலும், முன்னணி இயக்குனர்களின் படங்களிலும் அவர்இருந்தார். பாரதிராஜாவின் பதினாரு வாயதினிலே, சிவப்பு ரோஜாக்கள், பாலு மகேந்திராவின்மீண்டும் கோகிலா, மூன்றாம் பிறை என அவரது புகழ் உயர்ந்து பறந்தது.
ஸ்ரீதேவி, கமலுடன் `சிகப்பு ரோஜாக்கள், கல்யாண ராமன், குரு,வறுமையின் நிறம் சிவப்பு, மீண்டும் கோகிலா, மூன்றாம் பிறை ஆகிய ஹிட் படங்களிலும், ரஜினியுடன் `தர்மயுத்தம், ஜானி, ராணுவ வீரன், அடுத்த வாரிசு, தனிக்காட்டு ராஜா, நான் அடிமை இல்லை போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு `இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்திலும் விஜய்யின் `புலி படத்திலும் நடித்தார். ஸ்ரீதேவி நடிப்பில் கடைசியாக வெளியான படம் மாம். இது அவருடைய 300ஆவது படமாகும்.ஸ்ரீதேவி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தனது நடிப்பிற்காக தமிழ் நாடு, ஆந்திர மாநில அரசுகளின் சிறந்த நடிகைக்கான விருதுகளையும், கேரள அரசின் சிறந்த குழந்தை நட்சத்திர விருதையும், ஆறுமுறை ஃபிலிம்ஃபேர் விருதினையும் வென்றுள்ளார். கலைத்துறையில் இவர் ஆற்றிய பணிக்காக இவருக்கு 2013ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.மூன்றாம் பிறை திரைப்படத்தில் கமலுக்கு இணையாக மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர் ஸ்ரீதேவிபிலிம்பேர், இந்தி சினிமாக்களில் சிறந்த பங்களிப்பு செய்ததிற்கான உள்ளிட்ட விருதுகள் பெற்றுள்ளார்.ஸ்ரீதேவி 1996ஆம் ஆண்டு இந்தி திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகிய மகள்கள் உள்ளனர்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் தனது அழகாலும் வசீகரத்தாலும், திறமையான நடிப்பாலும் கவர்ந்த நடிகை ஸ்ரீதேவி நள்ளிரவில் காலமானார். துபாயில் உறவினர் இல்லத்திருமண விழா ஒன்றில் பங்கேற்க குடும்பத்துடன் ஸ்ரீதேவி சென்றுள்ளார். ராஸ் அல் கைமா நகரில் உள்ள ரிசார்ட்டில் அவர் தங்கியிருந்தார். இந்நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதனிடையே ஸ்ரீதேவி மறைவுக்கு பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, த்ரிஷா உள்ளிட்ட பிரபலங்கள் பலர்தங்களது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படமாகத் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.பெங்களூரைச் சேர்ந்த ரசிகர் மன்றத்தினர் இந்த படத்தைத் தயாரிக்கின்றனர்.