Saturday, December 13, 2025
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

சினிமா ஸ்டிரைக் :கமல் 100% ஆதரவு!-விஷால் தகவல்!!

admin by admin
March 18, 2018
in News
426 4
0
595
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

கௌதம் ராம் கார்த்திக் படத்திற்கு கிளாப் அடித்தார், இயக்குநர் மாரிசெல்வராஜ்!

NFDC –  ICAF நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா!

ரொமான்டிக் காமெடி ட்ராமா ‘டியர் ரதி’ !

மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசனை சந்தித்தது ஏன் என்பது குறித்து நடிகர் விஷால் கூறியதாவது, ‘ கமல் சினிமாதுறை சார்ந்த முக்கியமான பிரமுகர். இப்போது ஸ்டிரைக் நடந்து வரும் வேளையில் என்ன நடக்கிறது என்பதை கமலிடம் சொல்ல வேண்டியது என்னுடைய பொறுப்பு. எதற்காக ஸ்டிரைக்கில் ஈடுபடுகிறோம். எந்தெந்த வி‌ஷயங்களுக்காக போராடுகிறோம் என்பதை விலாவாரியாக அவரிடம் தெரிவித்தேன். நான் சொன்னதை அவர் தெளிவாக கேட்டுக் கொண்டார். அவர் சினிமாவின் முன்னோடி. எனவே அவருடைய ஒத்துழைப்பு எங்களுக்கு 100 சதவீதம் இருக்கும். தமிழ் சினிமாவை பொறுத்தவரை அவர் குரல் கொடுத்துள்ளார். எந்த பிரச்சினையாக இருந்தாலும் அவர் பக்க பலமாக இருந்துள்ளார்.
சினிமா எப்படி ஒரு துறையோ அப்படித்தான் கமலுக்கு அரசியல் இன்னொரு துறை. அவர் இப்போது 2-வது துறையை தேர்ந்தெடுத்துள்ளார். சினிமாதுறை பிரச்சினைகளை நான் நடிகர் சங்க பொதுச் செயலாளர் என்ற முறையிலும், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என்ற முறையிலும் கமலிடம் சென்று சொல்வது எனது கடமை. அதனால் போய் சொன்னேன்.இப்போது நடக்கும் ஸ்டிரைக்கை வேலைநிறுத்தம் என்று சொல்வதை விட சினிமா துறையை புதுப்பிக்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும். இதில் நிறைய வி‌ஷயங்களை மாற்ற வேண்டும் என்பது எல்லோருடைய உணர்வு. எனவே இதில் எதிர்காலத்தில் அவருடைய பங்களிப்பும் இருக்கும் என்று நம்புகிறேன்.தயாரிப்பாளர் சங்க போராட்டம் முடிவுக்கு வருவது குறித்து தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. நாளை (திங்கட்கிழமை) டைரக்டர்களுடன் பேச்சு நடத்த உள்ளோம். செவ்வாய்க்கிழமை கேமராமேன்களுடன் பேச்சு வார்த்தை. அதன்பிறகு நடிகர் சங்கத்தினர் பேச்சு வார்த்தை நடத்துவோம். எங்கள் பிரச்சினைகளை தியேட்டர் அதிபர்கள் புரிந்து கொள்ளும்போது அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவோம்.சினிமாதுறை சார்ந்த அனைத்து அமைப்புகளுடனும் பேச்சு வார்த்தை தொடரும். இது ‘ஈகோ’ வினாலோ, அவசரப்பட்டோ எடுத்த முடிவு அல்ல. இந்த நேரத்தில் தயாரிப்பாளர்கள் படம் எடுக்கும்போது ஒரு கஷ்டம் வருகிறது. படம் ரிலீஸ் ஆகும் போது இன்னொரு கஷ்டம் இருக்கிறது. நாங்கள் கேட்பது அடிப்படை வி‌ஷயங்கள்.டிக்கெட் விற்பனையை கம்ப்யூட்டர் மயமாக்குங்கள் என்று சொல்லும்போது அதை அவர்கள் கண்டிப்பாக செய்தாக வேண்டும். ஒரு வண்டி வாங்குகிறோம் என்றால் 36 தவணை அல்லது 48 தவணை இருக்கும். 48-வது தவணைக்கு பிறகு எனக்கு ஒரு தெளிவு வரும். வண்டி எனக்கு சொந்தம். 49-வது மாதம் நான் கட்டத் தேவையில்லை. ஆனால் சினிமாவில் என்னவென்றால் நாங்கள் கட்டிக் கொண்டே இருக்கிறோம். கட்டக்கூடாத கட்டணத்தை இன்னும் கட்டிக் கொண்டே இருக்கிறோம்.இன்னொன்று, மக்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்க்க வேண்டும். பாப்கார்ன் செலவிலும், உணவு பொருட்கள் செலவிலும் விஷால் ஏன் மூக்கை நுழைக்கிறார் என்றால் நான் அதற்கு வரவில்லை. மக்கள் சந்தோ‌ஷமாக வந்து படம் பார்க்க வேண்டும். அவர்கள் அமைதியாக இருக்க வேண்டும். அது ரொம்ப ஆடம்பரமான வி‌ஷயமாக தெரியும்போது அதை எப்படி முறைப்படுத்தி அவர்களை தியேட்டருக்கு வரவழைக்க வேண்டும் என்பதுதான் எங்களின் முயற்சி.இதுதொடர்பாக நிறைய வி‌ஷயங்களை நாங்கள் பேசுகிறோம். ஆன்லைன் முன்பதிவுக்கு 1 டிக்கெட்டுக்கு கூடுதலாக ரூ.30  வசூலிக்கிறார்கள். நான் குடும்பத்துடன் படம் பார்க்க செல்லும்போது 1 டிக்கெட்டுக்கு 30 ரூபாய் கூடுதல் என்பது எனக்கு அதிகமாக தெரிகிறது. அதைத்தான் சொல்கிறோம். ஏன் 30 ரூபாய் போடுகிறீர்கள், 5 ரூபாய் போடுங்கள். 25 ரூபாயை சலுகையாக கொடுங்கள். அவர்கள் படம் பார்க்க தியேட்டருக்கு வருவார்கள். இதைத்தான் நாங்கள் விண்ணப்பமாக வைக்கிறோம். இது தொடர்பாக ரஜினியை இதுவரை சந்திக்க வில்லை. கண்டிப்பாக அவருக்கும் தகவல் தெரியப்படுத்துவோம்.இது சினிமா துறை சார்ந்த ஒரு வி‌ஷயம். மாநகராட்சியை பற்றி எல்லோருக்கும் தெரியுமா? இந்தியாவிலேயே முதல் மாநிலமாக நாம்தான் 2 முறை வரி செலுத்துகிறோம். அதை 30 சதவீதத்தில் இருந்து 8 சதவீதத்துக்கு கொண்டு வந்தார்கள். அதுவே இப்போது எங்களால் முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம்.ஜி.எஸ்.டி. உள்பட அனைத்து வரிகளையும் மக்கள் மீது திணிக்கும்போது டிக்கெட் விலை அதிகரிக்கிறது. அது பெரிய படங்களுக்கு தாங்குகிறது. சிறிய பட்ஜெட் படங்களுக்கு தாங்கவில்லை. இதையெல்லாம் பேசி சரி செய்யும் போதுதான் நல்ல தீர்வு ஏற்படும.இவ்வாறு அவர் கூறினார்.

admin

admin

Related Posts

கௌதம் ராம் கார்த்திக் படத்திற்கு கிளாப் அடித்தார், இயக்குநர் மாரிசெல்வராஜ்!
News

கௌதம் ராம் கார்த்திக் படத்திற்கு கிளாப் அடித்தார், இயக்குநர் மாரிசெல்வராஜ்!

by admin
December 12, 2025
NFDC –  ICAF நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா!
News

NFDC –  ICAF நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா!

by admin
December 12, 2025
ரொமான்டிக்  காமெடி ட்ராமா ‘டியர் ரதி’ !
News

ரொமான்டிக் காமெடி ட்ராமா ‘டியர் ரதி’ !

by admin
December 12, 2025
‘அவதார்’ படத்திற்கு இந்தியாவின்  வலுவான ‘ஆன்மீக’ தொடர்பு! – இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்.
News

‘அவதார்’ படத்திற்கு இந்தியாவின் வலுவான ‘ஆன்மீக’ தொடர்பு! – இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்.

by admin
December 11, 2025
நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளர், திமுகவில் இணைந்தார் !
News

நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளர், திமுகவில் இணைந்தார் !

by admin
December 11, 2025

Recent News

NFDC –  ICAF நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா!

NFDC –  ICAF நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா!

December 12, 2025
ரொமான்டிக்  காமெடி ட்ராமா ‘டியர் ரதி’ !

ரொமான்டிக் காமெடி ட்ராமா ‘டியர் ரதி’ !

December 12, 2025
‘அவதார்’ படத்திற்கு இந்தியாவின்  வலுவான ‘ஆன்மீக’ தொடர்பு! – இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்.

‘அவதார்’ படத்திற்கு இந்தியாவின் வலுவான ‘ஆன்மீக’ தொடர்பு! – இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்.

December 11, 2025
நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளர், திமுகவில் இணைந்தார் !

நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளர், திமுகவில் இணைந்தார் !

December 11, 2025

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?