நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மையம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி அதில் மும்முரம் காட்டி வருகிறார்.இந்நிலையில் அவர் நடித்து இயக்கிய விஸ்வரூபம்-2 வெளியாக உள்ளது. சபாஷ் நாயுடு படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்து உள்ளது. தற்போது லஞ்சம் ஊழலை எதிர்த்து தமிழக அரசியலில் குதித்துள்ள கமல்ஹாசன்,விரைவில் ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்கவுள்ளார்.ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு வரும் இந்தப் படத்திற்காக ஆரம்பகட்ட பணிகளை ஷங்கர் தைவானில் முகாமிட்டு பணியாற்றி வந்தார். இந்நிலையில் கமல்ஹாசன் இந்த படத்தின் தன் கதாபாத்திரத்திற்காக தற்போது விருமாண்டியை நினைவு படுத்தும்வகையில் பெரிய மீசையை வளர்த்து வருகிறார். விருமாண்டி மீசையுடன் கமலின் புதிய கெட்டப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.