தயாரிப்பாளர் சங்கம் நடத்தி வரும் ஸ்டிரைக் காரணமாக ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் முடங்கிக் கிடக்கிறது. இதனால் சில லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர்.பல கோடி நஷ்டமாகி உள்ளது. ஷூட்டிங் நடத்தக்கூடாது எனவும் உத்தரவிட்டதால் செட் போட்டு படப்பிடிப்புக்கு காத்திருந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் கூறியதாவது,
“தமிழ் திரைப்படத் துறை தற்போது பலவீனமாகி விட்டது. கிட்டத்தட்ட அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து, அது உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் இருக்கிறது. விட்டால், அத்துறையின் மொத்த உயிரும் போய் விடும்.
அதனால், இந்தத் துறையைக் காப்பாற்ற, மத்திய, மாநில அரசுகள் அனைத்து விதமான அவசர சிகிச்சைகளையும் கூடுதல் சிரத்தையுடன் எடுக்க வேண்டும். அனைவரும் சேர்ந்து ஒற்றுமையாக இருந்து, இந்தத் துறையைக் காப்பாற்றப் போராடுவதோடு, அனைத்துவிதமான உதவிகளையும் ஒருசேர செய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளார்.