படத்துக்கு படம் சம்பளத்தை ஏற்றுவதாகவும் தன்னுடன் நிறைய உதவியாளர்களை அழைத்து வந்து அவர்களுக்கும் சம்பளம் கொடுக்க நிர்ப்பந்திப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. நயன்தாராவுக்கு தமிழிலும் தெலுங்கிலும் நல்ல வரவேற்பு உள்ளது.அவரது படங்கள் நன்றாகவே கல்லா கட்டுகிறது . சமீபத்தில் கலெக்டராக தமிழில் நடித்து இருந்த ‘அறம்’ தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது . இதன் காரணமாகவே தனது சம்பளத்தை நயன்தாரா பல மடங்கு உயர்த்தி இருக்கிறார்.ஏற்கனவே ரூ.2 கோடி, ரூ.3 கோடி என்று சம்பளம் வாங்கிய அவர் தற்போது சம்பள தொகையை அதிரடியாக உயர்த்தி ரூ.5 கோடி வாங்குவதாக கூறப்படுகிறது.படத்துக்கு படம் நயன்தாரா தனது சம்பளத்தை ஏற்றுவதாகவும் தன்னுடன் நிறைய உதவியாளர்களை அழைத்து வந்து அவர்களுக்கும் சம்பளம் கொடுக்க நிர்ப்பந்திப்பதாகவும் அவர் மீது புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் நேற்று நடந்த தமிழ் பட அதிபர்கள் சங்க கூட்டத்தில் நயன்தாரா குறித்து விவாதம் நடந்தது. கூட்டத்தில் ,நடிகர்-நடிகைகளின் உதவியாளர்களுக்கும் அதிக சம்பளம் கொடுக்க வேண்டி உள்ளது என்று பட அதிபர்கள் குற்றம் சாட்டினார்கள். “ரூ.5 கோடி சம்பளம் வாங்கும் நயன்தாரா படப்பிடிப்புக்கு வரும்போது தன்னுடன் 5 உதவியாளர்களை அழைத்து வருகிறார். அவர்களுக்கு ஒரு நாள் செலவு மட்டும் ரூ.60 ஆயிரம் ஆகிறது.
அது தவிர நயன்தாரா ஓய்வெடுக்கும் கேரவனுக்கு தினமும் ரூ.10 ஆயிரம் வாடகை கொடுக்க வேண்டி உள்ளது. உதவியாளர்கள் நட்சத்திர ஓட்டலில் தங்கும் செலவும் தயாரிப்பாளர்கள் தலையில் தான் விழுகிறது என்று பட அதிபர்கள் குற்றம் சாட்டினார்கள்.நயன்தாராவின் சம்பளம் தவிர அவரது உதவியாளர்களுக்கு ஒரு படத்துக்கு ரூ.50 லட்சம் அல்லது ரூ.1 கோடி என்று கூடுதலாக கொடுக்க வேண்டி உள்ளது என்றும் தெரிவித்தனர். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதிர்ப்பு காரணமாக உதவியாளர்களுக்கு தனது கையில் இருந்து சம்பளம் கொடுப்பாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.இதற்கிடையே சில நடிகர்கள் தங்களது உதவியாளர்களுக்கு தாங்களே சம்பளம் கொடுத்து விடுவதாக கூறியுள்ளனராம். மேலும் அவர்களது பேட்டா, பெப்சி நிர்ணயித்த தொகையையே கொடுத்தால் போதும் என்றும் கூறியுள்ளனராம்,.