தமிழ்த் திரையுலகில் மெலோடியான பாடல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இளம்இசை அமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் தற்போது தெலுங்கு திரையுலகிலும் களமிறங்குகிறார்.
இது குறித்து ஜஸ்டின் பிரபாகரன் கூறியதாவது,” நான் அறிமுகமாகும் தெலுங்கு படத்தின் கதாநாயகன் “அர்ஜுன் ரெட்டி” புகழ் விஜய் தேவேர்கொண்டா. இளம் ரசிகர்கள் இடையே அவருக்கு இருக்கும் புகழ் சொல்லில் அடங்காதது. அவர் படத்தின் மூலம் அறிமுகமாவது என் பாக்கியம்.இந்தப் படத்தின் இயக்குனர் எனக்கு நீண்ட நாள் நண்பர். நாங்கள் இருவரும் ஏற்கனவே ” மரோ பிரபஞ்சம்” ,என்ற குறும் படத்தில் பணியாற்றினோம். இப்போது அந்த திரை படத்துக்கான இசை கோர்ப்பு நடந்து வருகிறது. விரைவில் தலைப்பு பற்றிய முறையான தகவல் வரும்.
தமிழில் சசிகுமார் நடிக்கும் “நாடோடிகள் 2″ , அதர்வா நடிக்கும் ஒத்தைக்கு ஒத்த, எஸ் ஜே சூர்யாவின் பெயரிடப்படாத படம் என கைவசம் இருப்பதால் பிசியாகவே இருக்கிறேன். மலையாளத்தில் ஏற்கனவே அறிமுகம் ஆகி விட்டேன். தற்போது தெலுங்கிலும் அறிமுகமாவது எனக்கு மிகுந்த பெருமை. இசைக்கு எப்படி மொழி பிராந்தியம் அநாவசியமோ , இசைக் கலைஞனுக்கும் அப்படியே. காற்றின் தேசம் எங்கும் செல்லும் காணமே ஒரு இசை கலைஞனின் உயிர் மூச்சு” என்கிறார் .

