கொத்தவரங்காய் மாதிரி இருந்தாலும் காரியத்தில் அந்த காய் மாதிரியே இருப்பார் அனிருத். எல்லோருக்கும் கொத்தவரங்காய் காய்கறி லிஸ்ட்டில் ஒரு பொருள். ஆனால் தொழில் முனைவோருக்கு அது கோல்ட் ! அதிலிருந்துதான் பசைக்கான ஆதாரப்பொருள் கிடைக்கிறது. அது மாதிரிதான் அனிருத்திடம் இருந்து மனதுக்கு இசைவான இசை கிடைக்கிறது.
‘ஒய் திஸ் கொலவெறி?’மாதிரியான அமர்க்களமான பாடல்களை கொடுத்துவரும் அனிருத் ஜூன் 16, 17 ஆகிய இரு நாட்கள் லண்டன் , பாரீஸ் ஆகிய நகரங்களில் பிரமாண்டமான இசை நிகழ்ச்சி நடத்தப் போகிறார். ஹம்சினி எண்டர்டெயின்மென்ட், ஹியூ பாக்ஸ் ஆகிய இரு பெரிய நிறுவனங்கள் இணைந்து நடத்துகின்றன. கிக்ஸ் டைல் ஷோ பாணியில் இந்திய இசைக் கலைஞர் நடத்தும் முதல் நிகழ்ச்சி இதுதான்!
பாரீசில் உள்ள ஜெனித் நகரில் தமிழ் இசைக்கலைஞர்கள் யாரும் இசை நிகழ்ச்சி நடத்தியதில்லை.அனிருத் நடத்துகிறார் முதன் முதலாக!
ரஜினிகாந்த் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இணையும் படம், நயன்தாரா வின் ‘கோலமாவு கோகிலா’ ஆகிய படங்களுக்கு இசை அனிருத்.
ம்ம்ம் அசத்துங்க!