ஜெயம் ரவி நடிக்கும் ‘ரோமியோ ஜுலியட்’ படத்தில் இடம்பெற்ற ‘டண்டனக்கா’ பாடல், இளைஞர்களிடையே டங்கமாரி பாடலுக்கு இணையாக பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடல் பலரது செல்போனின் காலர் டியூனாக மாறியுள்ள நிலையில், இந்த பாடலின் வெற்றிக்கு ரசிகர்களுக்கும் படக்குழுவினர்களுக்கும் ஜெயம் ரவி தனது பேஸ்புக் ,மற்றும் டிவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.மேலும் படங்களில் நடிப்பது மட்டுமின்றி படங்களை தயாரிக்கவும், இயக்கவும் திட்டமிட்டு இருப்பதாகவும், தனது நீண்டநாள் கனவு வெகுவிரைவில் நிறைவேறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.ரோமியோ ஜூலியட்’ படத்தில் ஜெயம் ரவியுடன் ஹன்சிகா, பூனம் பாஜ்வா, விடிவி கணேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் ஆர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் இந்த படத்தை லக்ஷ்மண் இயக்கி வருகிறார். இந்த படம் வெகுவிரைவில் ரிலீஸாகவுள்ளது.












