அவன் வீட்டில் தண்ணீர் வரவில்லை என்றால் ‘ஐயோ கம்மாயே வத்திப் போச்சு போல இருக்கே ! என் வீட்டு பைப்ல தண்ணியே வரலே’ எனக் கூப்பாடு போடும் மனிதர்கள் இருப்பது மாதிரி திரை உலகிலும் சிலர்!
நடிகைக்கும் படக்குழுவுக்கும் பிரச்னை என்றால் அதன் வேர் என்ன என்பதை பார்க்க மாட்டார்கள். சம்பந்தபட்டவரும் மார்க்கெட் உச்சியில் இருந்தால் அவ்வளவுதான் யாரையுமே மதிக்கமாட்டார் .இது நடிகை, நடிகர் இருவருக்கும் பொருந்தும்.
பேவரிட் இறக்குமதி தேசமான கேரளத்தில் இருந்து வந்தவர் சாய் பல்லவி. குறுகிய காலத்திலேயே வம்பு நடிகை என பெயர் வாங்கி இருக்கிறார்.
‘இது ஒத்து வராத கேசு ‘என்று சொல்லி படங்களில் இருந்து தூக்கும் படலம் தொடங்கி இருக்கிறது.
சாந்தனுபாக்யராஜின் படத்திலிருந்து கழற்றி விடப்பட்டிருப்பதாக ஒரு சேதி!
டைரக்டர் ராஜேஷ் இயக்கம் படத்திலிருந்து நீக்கப் பட்டதாக இன்னொரு தகவல்.இந்த படத்தில்தான் நயன் நடிக்கிறார்.
அறியாத வயசு புரியாத பொண்ணுன்னு பார்த்தா அது ஊருக்கே உபதேசம் பண்ணும் போலிருக்கே!