அரசியல் தலைவரைப் பற்றிய படம் என்றாலே சென்சாரின் விசுவாசம் கடுமையாகிவிடும். தற்கால தலைமைப் பதவிகளில் இருப்பவர்களைப் பற்றிய உண்மைச்செய்திகள் சுட்டுவிடுமோ என்று பயப்படுவார்கள். நீதித் துறையின் தலைமையில் இருப்பவர்களே அதிகார தலையீடு இருப்பதாக பிரஸ் மீட் நடத்துகிற போது சென்சார் என்ன செய்ய முடியும்?சென்சார் என்பது ஆளும்கட்சியின் கைபாணம்தானே!
இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை பற்றி ஒரு படம் தயாராகிறது. பிரதமருக்கு மீடியா அட்வைசராக இருந்த சஞ்சய் என்பவரின் ‘ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’தான் கதை. அதில் மன்மோகன் சிங்காக நடிப்பவர் அனுபம்கெர்.பண்பட்ட நடிகர். திறமைசாலி. தற்போதைய பிரதமர் மோடிக்கும் நண்பர். மோடியை பற்றிய கதையாக இருந்தால் திரில்லிங்காக இருக்குமே!