சேத்துக்குள் துழாவியவன் ஒருவன், துள்ளிய விரால் மீன் விழுந்ததோ மற்றவன் வலையில் என்பது மாதிரி ஒரு கதை நடந்திருக்கிறது. பிகினி போடணும்னா ஒரு ரேட், லிப்லாக் என்றால் அதுக்கு தனி ரேட் என்று நம்ம நடிகைகள் லிஸ்ட் போட்டு வைத்திருப்பார்கள்.
அதையும் தாண்டி…..ஓர் அதிசயம்!
இயக்குநர் சுகுமார் ஒரு தெலுங்கு படத்தில் நடந்த ஒரு சுவையான சம்பவத்தை லஸ்ஸி மாதிரி கொடுத்தார்.
“சரண் சமந்தா இருவருக்கும் லவ் சீன். சுற்றுச்சூழல் சூப்பரா இருக்கு. ஜில்லுன்னு காத்து.ரெண்டு பேருக்குமே செம மூடு, சமந்தா சரணைப் பார்த்து ஐ லவ் யூ சொல்லணும்.ரொமான்ஸ் தூக்கலா தெரியனும். ரெண்டு நாளா மண்டையை குடைஞ்சும் சீன் அமையல. ப்ரொட்யூசர் பார்த்தார்.
“சுகுமார், ஒரு சேலஞ்ச்.இந்த சீனை பிரமாதமா எடுத்திட்டா உங்களுக்கு 10 லட்சம் உடனே தர்றேன்”என்றார்.
என்னுடைய அசிஸ்டென்ட் நாலு பேருடன் உட்கார்ந்து டிஸ்கஸ் பண்ணினேன்.அடுத்த முப்பது நிமிஷத்தில் அந்த சீன் சூப்பரா வந்திருச்சி! எப்படி ?
இப்படித்தான் எடுக்கப்போறேன்கிறது சமந்தா,சரண் ரெண்டு பேருக்குமே தெரியாது.ஆன் த ஸ்பாட், சமந்தாவை ரோமான்சுடன் கிஸ் பண்ண சொன்னேன்,எதிர்பாராத முத்தம், அந்த இனிய நினைவுடன் அவரை போலீஸ் இழுத்திட்டு போய்விடும். சொன்னபடி பத்து லட்சம் கிடைத்தது நானும் என் அசிஸ்டன்டுகளும் பிரிச்சிக்கிட்டோம்.” என்று சுவையுடன் சொன்னார்.