தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையைத் தொடங்கினார்கள் இன மான உணர்வு உள்ள திரைப்பட இயக்குநர்கள்.
இன்று முற்பகல் நடந்த இந்த நிகழ்ச்சியில் பாரதிராஜா, அமீர் ,ஆர்.கே. செல்வமணி, சத்யராஜ்,வி.சேகர்,வ.கவுதமன்,தங்கர் பச்சான், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பாரதிராஜா பேசுகையில் “மொழி, இனம்,பண்பாடு இவைகளுக்கு மட்டுமில்லாமல் நாளை நமது நிலமான தமிழ்நாட்டுக்கும் பேராபத்து வரலாம். எங்கள் பேரவை அரசியல் சார்பற்றது. கட்சிகளுக்கு அப்பாற்பட்டது.ஒன்றிரண்டு பிரச்னை என்றால் பரவாயில்லை .தமிழகமே கொந்தளிக்கிறபோது ஐபிஎல் தேவையா?இளைஞர்களை திசை திருப்புவதற்காக வலிந்து திணிக்கிறார்கள்.ஐ.பி.எல்.லை தள்ளி வையுங்கள்! என் தாய்க்கு ஊறு வருகிறபோது நான் சும்மா இருக்க முடியாது.”என்றார்.
“ஐபிஎல்.லை எப்படி தடுப்பீர்கள?”
“போருக்கு செல்கிறவன் ‘நான் இந்த வழியாகசென்று, இப்படித்தான் போராடுவேன் என்று வியூகத்தை சொல்வானா?நமது உரிமைகள் வேறு எங்கேயோ இருக்கிறது என்கிறபோது அதை மீட்க வேண்டாமா?”
“இந்த நேரத்தில் ஐபிஎல் நடத்தக்கூடாது சேப்பாக்கம் மைதானம் காலியாக கிடக்கவேண்டும்”” என்று சத்யராஜ்வலியுறுத்தினார்
.ஆர்.கே.செல்வமணி பேசும் போது “உலகநாடுகளுக்கு இந்தியா ஒரு குப்பைக்கிடங்காக இருக்கிறது.இந்தியாவுக்கு தமிழ்நாடு குப்பைக்கிடங்காக இருக்கிறது.தேசியக்கட்சிகள் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரமுடியாது என்பதால் நம்மை அடிமைகளாக நடத்த பார்க்கிறது “என்றார்.
பேசிய அனைவரும் தமிழர்களின் உரிமைய வலியுறுத்தியே பேசினார்கள்.
இதற்கிடையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல் படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை .காவிரி நீர் பங்கிடு தொடர்பாக மே.3ம் தேதிக்குள் முடிவு செய்யவேண்டும்என உச்சநீதிமன்றம் உத்திரவு பிறப்பித்திருக்கிறது.