ஆந்திர நடிகர் சங்கத்தின் முன்பாக ‘அரை நிர்வாணப்’ போராட்டம் நடத்தியதற்காக ஒரு நடிகையை ‘சோசியல் பாய்காட்’ பண்ண சொல்லி உத்திரவிட்டிருக்கிறது தெலுங்கு நடிகர் சங்கம!
சரி, அந்த நடிகையை ‘முழு நிர்வாணமாக’ பார்க்க முயன்ற சினிமாப் பிரபலங்களுக்கு என்ன தண்டனை? கட்டாயப்படுத்தியவர்களுக்கு என்ன தண்டனை? அவரது குற்றச்சாட்டை விசாரித்தார்களா இல்லையா என்பது தெரியவில்லை.
நடிகர் சங்கத்தின் 900 உறுப்பினர்களுக்கும் உத்திரவு பறந்திருக்கிறது. ‘ஸ்ரீ ரெட்டியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்க வேண்டும் ,நடிக்கக்கூடாது!’
குடி இருக்கும் பிளாட்டையும் காலி பண்ணச்சொல்லி ஐ.எ.எஸ்.அதிகாரி உத்திரவிட்டிருக்கிறார்.அது அவரது வீடு.