அசல் எது போலி எது என்பதை தீர்மானிக்க முடியாத அளவுக்கு போட்டோ கலை முன்னேறி இருக்கிற காலத்தில் நம்மை குழப்புகிற அளவுக்கு அரை நிர்வாண போராளி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
அலாரம் வைத்த டைம் பீஸ் மாதிரி திரை உலக பிரபலங்களின் உறக்கத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது. ராணா டகுபதியின் சகோதரர் அபிராமுடன் நடிகை ஸ்ரீ ரெட்டி நெருக்கமாக இருக்கிறார். வாய்ப்புத் தருவதாக சொல்லி வாழைப்பழம் சாப்பிட்டுவிட்டு போனவர்களின் பெயர்களையும் வெளியிடப்போவதாக சொல்லி இருக்கிறார். பின்னணி பாடகி சுசித்ரா மாதிரி கிளம்பிவிட்டாரே என கதி கலங்கி இருக்கிறார்கள்.
அது ‘மார்பிங் செய்யப்பட்டது’ என்பதாக திரை உலகத்தினர் சொல்கிறார்கள் .முடிவு என்ன என்பதை சீக்கிரம் சொல்லிடுங்கப்பா!