விஜய்-அஜித்துக்காக மோதிய நடிகைகள்!

photo 4வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்  சார்பில்  கங்காரு படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார் .  சாமி இயக்கியுள்ளார்.   அர்ஜுனா கதாநாயகனாக நடிக்க அவரின்  தங்கையாக   ஸ்ரீபிரியங்கா நடித்துள்ளார். அர்ஜுனாவின் காதலியாக  வர்ஷா அஸ்வதி மற்றும்   தம்பிராமையா, கலாபவன் மணி, கஞ்சா கருப்பு, இயக்குனர் ஆர். சுந்தர்ராஜன்  இயக்குனர் ஜெகன் உள்பட பலர்  நடித்துள்ளனர். இசையமைப்பாளராக பாடகர் ஸ்ரீநிவாஸ் அறிமுகமாகிறார்.   ஒளிப்பதிவு ராஜரத்னம் செய்துள்ளார். கங்காரு படத்தில் அஜித் ரசிகர்களையும் விஜய் ரசிகர்களையும் மோதவிடும் காட்சி ஒன்றை வைத்துள்ளார் இயக்குனர்  சாமி. அதன்படி, பிரியங்கா அஜித் ரசிகையாகவும், வர்ஷா விஜய்யின் ரசிகையாகவும் வருகிறார்கள். இருவரும் ஒரு காட்சியில் தங்கள் நாயகனின் அருமை பெருமைகளை சொல்லி காரசாரமாக மோதிக்கொள்வார்கள். பிரியங்கா அஜித்தின் புகழ் பாட, வர்ஷா அதற்கு காரசாரமாக பதிலடி கொடுப்பதோடு விஜய்யின் புகழ் பாடுவார். இப்படியாக இவர்களின் சண்டை கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்களுக்கு நீளும்.  அதோடு படத்தில்அஜித்  ரசிகரையே பிரியங்கா மணந்து கொள்வது போலவும்  காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.  இப்படம் வரும்  ஏப்ரல் 10 ந்தேதி   வெளியாகிறது.