பத்திரிக்கை உலகில் எனது நீண்ட கால நண்பர் ‘தேவி’மணி.
அந்தப் பத்திரிக்கையின் வளர்ச்சிக்கு
தன் வாழ்நாளின் பெரும்பகுதியை
ஒதுக்கியதால் ‘தேவி’ இவரது அடையாளமாகிவிட்டது. கட்டுரைகள் எழுதினால் ஆழமாக
சிந்தித்து எழுதுவார்.
பேட்டி என்றால் ஒரு மனிதரை
உள்ளும் புறமும் ‘ஸ்கேன்’ செய்வதுபோல் எழுதி வாசகனை
சிலிர்க்க வைப்பார். 
2008-ம் ஆண்டு கம்ப ராமாயணம் உரை நிகழ்த்த நான் ஓராண்டு முழுக்க ஆய்வு செய்த போது ‘தேவி’ இதழில் அதை தொடராக எழுதினார் .
அப்போதுதான் என்னைப்போலவே
அவரும் ராமாயணத்தை கூடவே படித்து வருகிறார் என்று அறிந்தேன் .
அல்லயன்ஸ் நிறுவனம் ‘கம்பன் என் காதலன்’ என்ற தலைப்பில்
அதை நூலாக வெளியிட்டது.
பத்திரிக்கை உலகில் அந்த அளவு நேர்மையாக, கடுமையாக உழைத்தவர்.
எழுத்தாளர்களுக்கு ஓய்வு ஏது.
இப்போது ‘சினிமா முரசம்’ – என்ற தலைப்பில் இணைய தளம் துவங்குகிறார். 60 ஆண்டு கால சினிமா உலகில் அவர் அறியாத விஷயங்கள் இருக்காது .
இணைய தளம் வழி இன்றைய இளைய தலைமுறைக்கு தீனி போட
முனையும் அவர் முயற்சி வெற்றி பெற
இதயபூர்வமாக வாழ்த்துகிறேன் 💐
-சிவகுமார்.












