“திருட்டு விசிடி என்பது தமிழ்நாட்டில் மட்டும்தான் இருப்பதுபோல பாவனை செய்கிறவர்கள்” சற்று வட இந்தியாவை திரும்பிப்பாருங்கள், வயிற்றுவலி வந்து கதறுகிறார்கள்.”திருட்டு விசிடியை ஒழிப்பதற்கு ஒன்று சேருவோம் ” என்று கூவுகிறார்கள்.
கொள்ளை அடிப்பது என்றாலும் கொள்ளை நோய் கொள்வது என்றாலும் ‘அகண்ட பாரதத்துக்கு’ தேசிய வியாதி என்றாகிப் போனது.அரசியலில் கொள்ளை அடிப்பவர்களின் துணையுடன் திரைத்துறையிலும் அது பரவிக்கொண்டிருக்கிறது.
தேசியவிருது நடிகையான வித்யாபாலன் திருட்டு விசிடியை ஒழிப்போம் வாருங்கள் என இறங்கி அடிக்க அழைப்பு விடுத்திருக்கிறார்.தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலுக்கும் அழைப்பு வந்திருக்கவேண்டும்.
“திரைத்துறையின் முக்கியமான பிரச்னையில் பங்கு பெறுவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறதுஎல்லோரும் ஒன்றிணைந்து போராடி திருட்டு விசிடிக்கு முற்றுப் புள்ளி வைக்கவேண்டும்.
சட்டவிரோதமாக பதிவிறக்கம் செய்து நம்மை கொள்ளை அடிப்பதை தடுக்க வேண்டாமா? வாருங்கள்! ஒன்று சேருவோம்” என அழைப்பு விடுத்திருக்கிறார்.