கழுதை உதைக்குமே என்று ஒதுங்கி நடந்தால் ஓரமாக நின்ற குதிரை கடித்த கதையாகி விட்டது.!பத்துப் பேருக்கு தப்பாக பட்டால் இரண்டு பேருக்கு அது சரியாக படுமல்லவா,அது மாதிரி ஆகிவிட்டது ஸ்ரீ ரெட்டியின் பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டு.!
“எந்த உலகத்தில்தான் வன்புணர்வு நடக்கல. தேவர்கள் வாழ்வதாக சொல்லப்படுகிற அந்த மேலோகத்திலேயே நடக்கிதே.இங்கே நடப்பது என்ன தெய்வக் குத்தமா? “என்கிற ரேஞ்சுக்கு பிரபல டான்ஸ் மாஸ்டர் சரோஷ்கான் சொல்லியிருக்கிறார். பாலிவுட்டிலேயே இவர் டாப் த்ரீ யில் ஒருவர்.
“ஒரு பெண்ணின் சம்மதத்துடன்தானே நடக்கிது?அது அந்த பெண்ணின் பிழைப்பு!” என்கிறார்.
பிறகு என்ன நினைத்தாரோ சொன்னதை திரும்பப் பெற்றுக்கொண்டார்.
என்ன உலகமடா…வாமிட் பண்ணியதை வயித்துக்குள் தள்ளப் பார்க்கிது!