ஜாகுவார் தங்கம் இல்லத் திருமண விழா !
சினிமா stunt மாஸ்டர் , இயக்குனர், தயாரிப்பாளரும் , நடிகருமான ஜாம்பவான் ஜாகுவார் தங்கம் – சாந்தி தம்பதியின் மகனும், வளரும் நடிகருமான ஜா.விஜய ஜாகுவாருக்கும் , வட பழனி ஆறுமுகம் – கீதா ஆறுமுகம் தம்பதியரின் மூத்த மகள் ஏ.நிவேதாவிற்கும் இன்று (25-4-2018) காலை ,வடபழனி – முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது.இத்திருமண விழாவில் கலைப்புலி எஸ்.தாணு, ராஜ்கிரண் , ராமராஜன், சீனு ராமசாமி , சமுத்திரகனி உள்ளிட்ட சினிமா பிரபலங்களுடன் எர்ணாவூர் நாராயணன்உள்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.