தனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் உரிமை ஆண்களுக்கு இருக்கிறபோது பெண்களுக்கும் அந்த உரிமை என் கூடாது?
இந்த காலத்துப் பெண்கள் அழுத்தமாகவே சிந்திக்கிறார்கள். பாதிக்கதவு மூடியபடியே இருக்க முகம் மறைத்து உறவுகளுடன் பேசிய அந்தக்காலம் மலையேறி பல மாமாங்கம் ஆகி விட்டது.
காதலர்களுக்காக காத்துக் கிடக்கிறார்கள் பல வி.ஐ.பி.வீட்டுப் பெண்கள். தாய்-தந்தையைப் போல தனக்கென காதல் கணக்கு தொடங்கி இருக்கிறார் ஸ்ருதிஹாசன்,
காதலர் லண்டன்.பெயர் மைக்கேல் கார்சல். அப்பா-அம்மாவுக்கு அறிமுகம் பண்ணி வைத்தாகி விட்டது. சரி திருமணம் எப்போது?
“அவசரக் கல்யாணமா?”
“அதுக்கு அவசியமே இல்லை!”
“எப்போதுதான் நடக்கும்?”
“நடக்கும்போது நடக்கும். எனது வேலைகளில் பிசியாக இருப்பதால் முன்னைப்போல் அவருடன் பேச முடியவில்லை. எனது கனவுகள் எப்போதும் மகிழ்ச்சியானவையே!.திரை உலகில் வெற்றி பெற பொறுமை அவசியம்.நான் இன்னும் கற்றுக்கொள்ள அதிகம் இருக்கிறது.” என்கிறார் ஸ்ருதிஹாசன்.