தமிழகத்தின் புகழ் எட்டுத்திக்கும் பரவ வேண்டும் என்று சில பாவப்பட்ட கவிஞர்கள் பாடி விட்டு தொலைந்து போய்விட்டார்கள். நல்ல வேளை உயிருடன் இருந்திருந்தால் இரண்டாவது தடவையாக சாக வேண்டியதாக இருந்திருக்கும்!
அண்டை மாநிலமான கடவுளின் தேசத்தில் இருக்கும் பிரபல நடிகர் சீனிவாசன் தமிழக அரசியலைப் பற்றி ‘மிகவும்’ கவுரவமாக கருத்து பதிவு செய்திருக்கிறார். இவர் நடிகர், இயக்குநர்,கதாசிரியர், தயாரிப்பாளர். கருத்துகளை தைரியமுடன் பதிவு செய்வதில் அஞ்சுவதில்லை.
அவர் சொல்கிறார் “தமிழ்நாட்டில் கொழுத்த பணம் வாங்கிக்கொண்டு அவர்களுக்கு ஓட்டு போடுகிறார்கள்.ஆனால் மலையாளிகள் அப்படிப்பட்டவர்கள் அல்லர்! ஒருவரிடம் காசு வாங்கினால் அடுத்தவருக்கு ஓட்டுப்போட்டு விடுவார்கள்.! மாகாத்மா காந்தி சொல்லியே திருந்தாதவர்களை சினிமாவினால் திருத்த முடியுமா என்ன?திருந்த மாட்டார்கள்!” என்று சொன்ன சீனிவாசன் கேரள வாக்காளர்களைப் பற்றி என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா?
“இந்திய ஜனநாயகத்தில் கேரள வாக்காளர்கள் முட்டாள்கள்! கேரளத்தில் உள்ளவர்கள் இன்டலிஜென்ட்ஸ் என்பார்கள். நான் ஓட்டுப் போட சென்றபோது எனது ஓட்டினை அரைமணி நேரத்துக்கு முந்தியே யாரோ ஒருத்தன் போட்டு விட்டான்! எவ்வளவு புத்திசாலிகள்! அஞ்சு வருஷம் நீ சுருட்டு.அடுத்த அஞ்சு வருஷம் இன்னொருத்தன் சுருட்டட்டும்.இப்படித்தானே இன்டலிஜென்ஸ் போகுது!” என்கிறார்.
கடுமையான ஆள்தான் சார்!