65-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கு விழாவில் குடியரசுத் தலைவருக்கு போதிய முக்கியத்துவம் கிடைத்து விடக்கூடாது என்பதில் சிலருக்கு அதிக விருப்பமோ என்னவோ?
140- விருதுகளில் 11 விருதுகளை மட்டுமே குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்குவார் ,ஏனைய விருதுகளை துறை சார்ந்த அமைச்சர் வழங்குவார் என்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்று ( வியாழன்.) மாலையில் விழா நடைபெற இருக்கிறது..
பார்வதி,பகத் பாசில், செழியன் ( டு லெட்) பிரசாத் தேவி நெனி ( பாகுபலி.) உள்பட 68 பேர் “நாங்கள் குடியரசுத் தலைவரின் கைகளால் விருதுகள் வாங்குவதற்காக குடும்பத்துடன் வந்திருக்கிறோம்.ஆனால் அமைச்சகத்தின் அறிக்கை எங்களை ஏமாற்றுவது மாதிரி இருக்கிறது. ஆகவே நாங்கள் விருதுகளை புறக்கணிக்கவில்லை.என்றாலும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருப்பம் இல்லை. ” என்பதாக கடிதம் எழுதிக் கொடுத்து விட்டார்கள்.
அமைச்சகத்தை சேர்ந்தவர்கள் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். விருதுகள் வழங்கு விழாவில் இதுபோல புறக்கணிப்பு கடிதம் கொடுத்திருப்பது வரலாறில் இதுவே முதல் முறை.
எதுவாக இருந்தாலும் சரி ,ஒரு சிலருக்கு மட்டுமே குடியரசுத் தலைவர் வழங்குவார் என்பது சரியான நடைமுறை இல்லை.