எத்தனையோ படங்கள் பாக்ஸ் ஆபீசில் சாதனைகள் புரிந்திருக்கலாம். ஆனால் அவைகளுக்கு ஹீரோ ப்ளஸ் பிரமாண்டம் காரணமாக இருக்கின்றன,
ஆனால் ஒரு நடிகையின் வாழ்க்கைப் பதிவு அமெரிக்காவையே அசைத்து பார்த்திருக்கிறது என்றால் என்ன சொல்வது? சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக சொல்லாவிட்டாலும் சுருக்கமாக சொன்ன விதம் அனைவரையும் கவர்ந்து விட்டது.
முக்கியமாக கீர்த்தி சுரேஷ் தேர்வு. ஜாதகம் பார்த்து தேர்வு செய்திருப்பார்களோ என்னவோ அத்தனை பொருத்தம். நடிப்பும் இயல்பாக அமைந்து விட்டது. ஜெமினிக்கு துல்கர் சல்மான் .இணை அழகுடன் அமைந்து விட்டது,
இதனால்தான் ஜி நெட் ஒர்க்ஸ் நடிகையர் திலகம் படத்தின் அனைத்து மொழி உரிமைகளையும் {சாட்டிலைட் } 11 கோடிக்கு வாங்கி இருக்கிறது.