எல்லோருக்கும் இப்படி மனைவி அமைவதில்லை. காதலித்து மணந்து கொண்டிருந்தாலும் சில நேரங்களில் பெண்கள் நிதானம் தவறி விடுவதுண்டு. சினிமா உலகில் பலருடன் பலவிதமாக நெருக்கம் காட்டி நடிகர்கள். நடிப்பது உண்டு. அது இயக்குனரின் கட்டளைக்கு இணங்கி பலர் முன்னிலையில் விளக்கு வெளிச்சத்தில் நிகழ்வது.!
அது தவறு என கணவன் மீது கர்,,புர்..ரென முறைத்துக் கொண்டிருந்தால் என்னாவது?
நம்ம விராட் கோலியை பாருங்கள். ஐபிஎல் லில் மட்டையால் விளாசு என விளாசுவதை படப்பிடிப்பில் இருந்தாலும் மனைவி அனுஷ்கா எப்படியெல்லாம் ரசிக்கிறார் தெரியுமா? செல்போனில் வகை வகையாக கமென்ட் போடுகிறார் தனது படத்துடன்!
அதை பார்த்தபோது ‘மச்சான் சூப்பர் அடி !” என அனுஷ்கா குரல் கொடுப்பது மாதிரி இருக்கிறது. அனுஷ்காவின் டி சர்ட்டிலும் கோலியின் நம்பர் 18.