நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் முதல் படத்தின் பெயர் தற்போது வெளியாகியுள்ளது. இதில்,சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கேரக்டர்களை ஏற்றுள்ளனர்.இப்படத்திற்கு “கனா” என பெயரிடப்பட்டுள்ளது.கிரிக்கெட் வீரராக ஆசைப்படும் மகள் – அவருடைய ஆசையை நிறைவேற்றி வைக்கப் பாடுபடும் அப்பா இவர்கள் இருவரையும் மைய்யப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்ட அருண்ராஜா இயக்குகிறார். திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார், பி.தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கின்றார். இப்படத்தினை
தனது கல்லூரி நண்பர்களுக்காக, கலையரசு என்பவருடன் இணைந்து சிவகார்த்திகேயன் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.