சிவகார்த்திகேயன் படத் தயாரிப்பில் முதன் முதலாக கால் வைத்திருக்கிறார். வெற்றிகளுடன் சில விழுப்புண்களும் அவருக்கு உண்டு. திரைத்துறையின் நெளிவு சுழிவுகளில் எப்படி செல்வது என்பதும் அவருக்குத் தெரியும்,அவரது படத்தி பெயர் ‘கனா’
முதல் போஸ்டர் மிரட்டலாக இருக்கிறது படத்தில் சத்யராஜ்,ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும்தான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இயக்கம் அருண்ராஜா காமராஜ்.