பாதாள உலகத்தில் போய்ப் படுத்தாலும் அங்கும் பப்ளிசிட்டி தேடுவார்கள் .அதற்கென இருக்கும் ஆட்களைப் பிடித்து கமிஷன் கொடுத்து பூமிக்கு மேலே பிரபலமாகிவிடுவார்கள். சும்மா உண்ணாவிரதம் என்று அறிவித்து விட்டு பெயர் வாங்கிக்கொண்டு போவதில்லையா அதற்கு சினிமாக்காரர்கள் மட்டும் விதி விலக்கா?
கேன்ஸ் பட விழாவுக்குப் போன புண்ணியவாட்டி மல்லிகா ஷெராவத் தூக்கினார் பாருங்கள் ஒரு அருவாளை!
உலகம் முழுக்க பப்ளிசிட்டி!
இவரது கிசுகிசுக்களை பட்டியல் போட்டாலே பத்து அடி உயரமாவது அடுக்கி விட முடியும்.
விழாவுக்குப் போனவர் இந்திய கலாசாரத்தை தூக்கி நிறுத்தும் வகையில் போஸ்களை தட்டியவர் திடீரென ஒரு கூண்டு தயார் பண்ணி அதற்குள் போய் கவர்ச்சியாக உட்கார்ந்து கொண்டார்.
என்ன மேடம்?
“உலக அளவில் பெண்களுக்கு செக்ஸ் டார்ச்சர். பச்சைக் குழந்தைகள் கூட தப்பவில்லை.ஒவ்வொரு நிமிடமும் ஒரு ரேப் .இதை கண்டிக்கும் வகையில் இந்த ‘கூண்டுக்குள்’ சிறை” என பேட்டியைத் தட்டி விட்டிருக்கிறார். இந்திய சினிமாவில் கட்டாய வல்லுறவு என சில நடிகைகளே கொந்தளித்திருப்பது அவருக்கு தெரியுமா, தெரியாதா?
என்னமோடா மொக்கையா….பொங்கலுக்கு சாம்பாரா,சட்டினியா?