கூடவே இருந்தாலும் அடுத்தவனுக்கு பள்ளம் வெட்டி வைக்கவும் கற்றுக் கொண்டிருக்க வேண்டும் .மெஜாரிட்டி இருக்கிறவன் வந்தாலும் போடா அப்பாலே என்று அரசியல் பண்ணுகிற நாட்டில் பள்ளம் தோண்டும் கலை கூட தெரியாது என்றால் எப்படி?
நல்ல படங்களை எடுத்து நாலு காசு சேர்த்தவர் தயாரிப்பாளர் பாபு ராஜா.
தற்போது ‘திருப்பதிசாமி குடும்பம்’ என்கிற பெயரில் ஒரு படம் தயாரித்திருக்கிறார். ‘அரசு’ ‘கம்பீரம்’ ஆகிய வெற்றிப்படங்களைக் கொடுத்த சுரேஷ் சண்முகம்தான் இயக்குநர்.
“எல்லா செல்வாக்கும் இருக்கிற ஆளு இத்தனை நாளா படங்கள் எடுக்காம ஒதுங்கியே இருந்திட்டீங்களே ?” என்று பாபுராஜாவை கேட்டபோது “சரியான நேரத்துக்காக காத்திருந்தேன். இப்ப டைம் நல்லா இருக்கு.மறுபடியும் எறங்கியாச்சு”என சிரித்தார்.
“பணம் இருந்தால்தான் குடும்பத்தில் நிம்மதி என்பதெல்லாம் வெளியில் சொல்லிக்கிறதுதான்! அந்த வீட்டுக்குள் போய்ப் பாருங்க. எவ்வளவு பிரச்னைகள் கொம்பு முழிச்சுக் கிடக்கும் என்பது தெரியும்?
ஒரு குடும்பம் சந்தோஷமா இருக்கு.சில சமூக விரோதிகளினால் சிக்கல்கள்.அதை எப்படி அண்ணன் தம்பி ரெண்டு பேரும் சமாளிக்கிறாங்க என்பதுதான் கதை. குடும்பக்கதை.ஆபாசமில்லாமல் ஒரு வாழ்க்கையை காட்டுகிற கதை ” என்றார் பாபு ராஜா.