பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் நடித்த ‘இரும்புத்திரை’ படத்துக்கு, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததையடுத்து இளம் ஹீரோக்களின் பார்வை இயக்குனர்பி.எஸ். மித்ரன் மீது விழுந்துள்ளது.இந்நிலையில் மித்ரன் இயக்கத்தில்,அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் அல்லது விக்ரம் ஆகிய இருவரில் ஒருவர் நடிக்கலாம் எனக்கூறப்பட்டு வந்த நிலையில்,பி.எஸ்.மித்ரனின் இரண்டாவது படத்தில் கார்த்தி நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை, பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இந்த நிறுவனம் ஏற்கெனவே சூர்யாநடித்த ‘சிங்கம் 2’ படத்தைத் தயாரித்துள்ளது. தற்போது, திரிஷா நடிப்பில் ‘மோகினி’, ரஜத் இயக்கத்தில் கார்த்தியின் நடிப்பில் உருவாகி வரும் பெயரிடப்படாத படம் ஒன்றையும் தயாரித்து வருகிறது.