மனதில் தோன்றியதை மறைக்காமல் சொல்லிவிடுவார் கங்கனா ரனாவத் .அதனால் பிழைப்புக்கே உலை வைக்கப்படுகிறது என்றாலும் போங்கடா நீங்களும் உங்க சினிமாவும் என சொல்லக்கூடிய நடிகை.
“உனக்கு முகத்தில் மீசை, எனக்கு கெண்டைக்காலில் மீசை “என குமுறுகிற பெண் சாதி.
இவருக்கும் சல்மான் கானுக்கும் ஆகாது !
வஞ்சினம் வைத்து பழி தீர்த்துக் கொள்ளும் பழக்கம் இந்த பெண்ணுக்கு உண்டு.
சல்மானின் ‘சுல்தான்’ பட புரமொஷனுக்காக வெள்ளைக்கொடி ஏந்தி அழைத்திருந்தார் சல்மான்.
கலந்துகொண்ட அவரிடம் “எப்படி இது சாத்தியம் ஆயிற்று?” என்று கேட்ததற்கு அடித்தார் பாருங்கள் ஒரு அடி!
அடுத்து கேட்பதற்கு தயக்கம் வந்து விட்டது,
“கற்பிழந்த ஒரு பெண்ணின் மனநிலை எப்படி இருக்குமோ அப்படி இருந்தது”
இப்படி பதில் சொல்லும் தைரியம் இங்கு யாருக்கு உண்டு!