அத்த மகனுக்கு அடி விழுந்தா முறைப்பொண்ணுக்கு மனசுல வலி எடுக்கும்னு சொல்வாங்க, நாளைக்கு தாலி கட்டப்போறவனாச்சே என்கிற கவலை,!
ஆனா துபாயில் சண்டைக்காட்சியில் அடிபட்டு பிரபாஸ் துடிக்கிறார்னு நியூஸ் ஹைதராபாத் ரீச் ஆன அடுத்த நொடியே அனுஷ்கா துபாய்க்கு ப்ளைட் பிடிக்கிறார்னா இன்னாய்யா மீனிங்கு?
ரெண்டு பெரும் லவ்வர்ஸ் .இது முதல் சேதி. பிறகு பாகுபலி முடிந்த பின்னர் கல்யாணம். இது இரண்டாவது நியூஸ்.
தப்பு ! அவர்கள் காதலர்கள் அல்லர். நண்பர்கள். பிரபாசுக்கு பெண் பார்க்கிறார்கள். அதைப் போல அனுஷ்காவுக்கு அவர்கள் வீட்டில் வரன் தேடுகிறார்கள் என உடைக்கும் செய்திகள்.
ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வமாக மணமேடை செய்திகள் வெளியாக வில்லை.
இந்த நிலையில்தான் துபாயில் நடந்த படப்பிடிப்பில் பிரபாஷுக்கு பலத்த அடி என்கிற செய்தி வந்தது, காயம் என்று கூட வரவில்லை.
துடித்துப் போன அனுஷ்கா பறந்து விட்டார் ஸ்பாட்டுக்கு!
“எதுக்கு இந்த முரட்டுப் பிடிவாதம்? இன்னும் மாறலியா, ஆபத்தான ஸ்டண்ட்னா டூப் போட்டுக்க வேண்டியதுதானே? நான் கண்டிப்பா சொல்றேன்.இனிமே இந்த ரிஸ்க் தேவை இல்லை” என்று கோபத்துடன் அட்வைஸ் பண்ணி இருக்கிறார்.
“அப்படியே ” என பிரபாசும் ஒப்புக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.
நட்பா காதலா.இதுக்கு என்னன்னு அர்த்தம் எடுத்துக்கொள்ள ?