ஒருவர் உயிருடன் இருந்தால் ஆதரவும் எதிர்ப்பும் எப்படி இரு அணிகளாக பிரிந்து நிற்குமோ,அதைப்போல பல்லாண்டுகளுக்கு பிறகு வெளியாகிய சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படம் இரு அணிகளை உருவாக்கி இருக்கிறது.
“என்னுடைய அப்பா மிகவும் தவறாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார் ” என்று ஜெமினியின் முதல் மகள் டாக்டர் கமலா செல்வராஜ் வருத்தம் தெரிவித்திருந்தார்.
தற்போது நடிகர் ராஜேஷ் புதிய தகவல்களை தெரிவித்திருக்கிறார்.
“சாவித்திரியின் பெர்சனல் வாழ்க்கையைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் சாவித்திரியிடம் தவறாக நடக்க முற்பட்டவர்களை எம்.ஜி.ஆர் .கடுமையாக கண்டித்திருக்கிறார். இதனால் அவருக்கு கெட்ட பெயர் . ஜெமினியை சாவித்திரி கல்யாணம் செய்து கொண்டது தவறான செயல். அந்த தப்பை அவர் செய்திருக்கக்கூடாது” என்கிறார் ராஜேஷ்.
இன்னும் என்னென்ன வருமோ தெரியவில்லை.