கஜோல்,பாலிவுட் மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானவர் . கஜோல் நடித்த மின்சாரகனவு 1997-ல் வெளியானது. பின்னர் பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கானை திருமணம் செய்து கொண்ட கஜோலுக்கு நைசா என்ற மகளும், யுக் என்ற மகனும் உள்ளனர்.15 வயதான மகள் நைசா தற்போது சிங்கப்பூரில் படித்து வருகிறார். கஜோல் தற்போது கிட்டதட்ட 19 வருடத்திற்கு பிறகு தமிழில் தனுசுடன் வேலையில்லா பட்டதாரி-2 படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்நிலையில் கஜோல் மற்றும் மகள் நைசா இருவரும் சிங்கப்பூரில் மேடம் டுஸாட் அருங்காட்சியகத்தில் அவரது மெழுகு சிலையை திறந்து வைத்துள்ளனர். அங்கு எடுத்த ஒரு புகைப்படத்தை கஜோல் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். “முதன்முறையாக மகளுடன் ரெட் கார்ப்பெட்டில் நடக்கப்போகிறேன்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற ஒரு விழாவில்தனது மகள் நைசாவை சினிமா உலகினருக்கு அறிமுகப்படுத்தினார் கஜோல். அப்போது உங்களது மகளும் சினிமா துறையில் கால் பதிப்பாரா எனக்கேள்வி எழுப்பினர்.அதற்கு பதிலளித்த கஜோல் எனது மகள் சமீபத்தில்தான் கல்லூரி படிப்பை முடித்திருக்கிறார்.வீட்டில் பலவகையான சமையல்களை செய்து அசத்துகிறாள். நைசாவுக்கு சினிமாவின் ஆர்வம் இல்லை. சிறந்த சமையல் கலைஞராக உருவாக வேண்டும் என்பதே அவளது விருப்பமாக இருக்கிறது என்று குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் மாடலிங்கோ,சினிமாவோ அவளுக்கு எதில் விருப்பமோ அதை தேர்ந்தெடுக்கும் உரிமை அவளுக்கு உள்ளது .அவளின் விருப்பத்திற்கு குறுக்கே நாங்கள் நிற்க மாட்டோம் என்கிறாராம். இதையடுத்து அடுத்த சில வருடங்களில் நைஸா பாலிவுட்டில் நடிகையாக களமிறங்கினால் ஆச்சரியப் படுவதற்கில்லை என்கிறது பாலிவுட் வட்டாராம்.