
ஒரு பாடலின் தலைப்பை வைத்து அந்த பாடலின் சாரம் பற்றி புரிந்து கொள்வது அரிதான விஷயம். ஆனால் மிக பெரிய எதிர்பார்ப்போடு துரித வேகத்தில் தயாராகும் “வஞ்சகர் உலகம்” படத்தில் வரும் ‘கண்ணனின் லீலை’ என்ற பாடல் வரிகள் புரிதலை சற்றே எளிமை ஆக்கிவிடுகிறது.
இந்த வித்தியாசமான தனிப்பாடலுக்கு பின்னால் உள்ள மனிதர் சாம் சிஎஸ்.
தொடர்ந்து தன்னுடைய இசை அமைப்பு மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அறிமுக இயக்குனர் மனோஜ் பீதா தனது படத்துக்கு இசை அமைப்பாளர் புதிய பலம் என்கிறார்..
இந்த பாடலை பின்னணி பாடகர் ஸ்வாகதா எஸ்.கிருஷ்ணா தனது ஒப்பில்லாத குரலால் பாடிக் கொடுத்திருக்கிறார்.
இந்திய இசைத்துறையில் ‘டிராப்’ அடிப்படையில் கர்னாடிக் டப்ஸ்டெப் வகையை வைத்து உருவான ஒரு புதிய வகை பாடல் இதுதானாம்
வஞ்சகர் உலகம் ஒரு வழக்கமான திரில்லர் படமாக மட்டும் இல்லாமல் இதுவரை பார்த்திராத ஒரு புது அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும்.என்கிறார் இயக்குனர் மனோஜ் பீதா (