நடிகை பிரியாமணி திருமணம் செய்து கொள்ள இருக்கும் முஸ்தபா ராஜ், ஒரு தொழிலதிபராம். முஸ்தபாவும், பிரியாவும் சில காலமாகவே காதலித்து வருகின்றனர். இந்த காதலுக்கு ஆரம்பத்திலிருந்தே இரு வீட்டிலும் எதிர்ப்பு இல்லை என கூறப்படுகிறது.. இதுவே இவர்களது காதல் சீக்கிரமே கல்யாணத்தில் முடிய முக்கியக் காரணம் என்கிறார்கள். . முற்றிலும் சினிமா பின்னணி இல்லாத குடும்பமாம் முஸ்தபா குடும்பம்.முஸ்தபாவைக் காதலித்து வந்ததை படு கமுக்கமாக வைத்திருந்த பிரியா மணி, அவருடன் சேர்ந்து பல இடங்களுக்கு சத்தமில்லாமல் போய் வந்துள்ளாராம். அதுதொடர்பான படங்கள் இப்போது இணைய தளங்களில் வலம் வருவது கண்டு அதிர்ச்சியில் உறைந்து விட்டாராம் அம்மணி! யுவன் சங்கர் ராஜா ,மோனிகா இவர்களைத் தொடர்ந்து மதம் மாறி திருமணம் செய்யும் நடிகை ப்ரியாமணி ஆவார்!