‘ராமா’எனப் போய்க்கொண்டிருந்த திருப்பதி பாலாஜியை அரசியல் வாதிகள் மலையிலிருந்து இறக்கி விட்டு விடுவார்கள் போலிருக்கிறது!
ஸ்ரீரங்கம் கோவில் யானைக்கு வடகலை நாமமா,தென்கலை நாமமா என ஒரு சண்டை நெடுங்காலத்துக்கு முன்னர் ஓடியது.கோர்ட்டு வரை போனார்கள்.பின்னர் ஒரு முடிவு காணப்பட்டது.
ஹரியும் சிவனும் ஒன்று இதை அறியாதார் வாயில் மண்ணு என ரைமிங்காக ஸ்லோகன் கூட சொன்னார்கள். சிவபக்தர்களும் ரெகுலராக திருப்பதி வந்து போகிறவர்கள்தான். இதற்காக அவர்கள் நாமம் போட்டுக்கொள்வதில்லை. பக்தி சிரத்தையுடன் திருநீறு அணிந்து கொள்வார்கள்..தடைகளும் இல்லை. அங்கு ஜாதிகள் பார்க்கப்படுவதில்லை.
இப்படி தடையில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது திருப்பதி தேர்,! அதையும் அரசியல்வாதிகள் தெருவில் கொண்டுவந்து நிறுத்தி விடுவார்களோ என்னவோ!
தெலுங்கு தேச கட்சியின் எம்.பி.யான நடிகர் முரளிமோகன் நேற்று திடீரென லார்ட் பாலாஜிக்கு ‘சவுத்ரி’ சாதி பட்டட்டத்தை சூட்டிவிட்டார். அவருடைய கோபம் பிஜேபி மீது!
“கர்நாடகாவில் ஜெயிப்பதற்காக என்னென்ன கோல்மால் செய்தீர்கள்?உங்களுக்கு முழு மெஜாரிட்டி கிடைக்கவிடாமல் எங்களின் ‘வெங்கண்ண சவுத்ரி’ உங்களை தண்டித்து விட்டாரே !” என்று சொல்ல சினிமா வட்டாரத்தில் எதிர்ப்பு கிளம்பிவிட்டது.
“லார்ட் வெங்கடாசலபதியை ‘சவுத்ரி’ சாதியாக்கிய நடிகர் முரளிமோகன் எம்.பி.யை மன நோய் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வையுங்கள்” என்று கதை வசன கர்த்தா சின்னி கிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
:சார் உங்களை நாங்கள் ஹீரோவாக மதிக்கிறோம். இன்ன ஜாதி என நினைத்து உங்களின் நடிப்பை பார்க்கவில்லை.வேறுபாடு இல்லாமல் ரசிக்கிறோம். நீங்கள் தலை குனிவை ஏற்படுத்திவிட்டீர்கள். திருந்துங்கள் இல்லையென்றால் சிகிச்சை பெற ஆஸ்பத்திரிக்கு செல்லுங்கள்” என்று எச்சரித்திருக்கிறார்.
ஏடு கொண்டலவாடா! உங்கள் சங்கு சக்கரத்தை சாதி வெறியர்கள் மீது பிரயோகம் பண்ணக்கூடாதா?