ஹைதராபாத் பிலிம்சிட்டி முழுக்க நம்ம மதுரைய்க்காரய்ங்க தான்!
“எனக்கு மதுரை ஆளுங்கதான் வேணும்” என்று இயக்குநர் சிவா கண்டிப்புடன் சொல்லவே பஸ்களில் கொண்டுவந்து இறக்கி விட்டார்கள். மதுரை அட்மாஸ்பியரில் ஒரு பாடல் காட்சி. அதற்குதான் மதுரை சிட்டிசென்ஸ் !சென்னை வரை ரயிலில்,பிறகு பஸ்களில் என வந்திருக்கிறார்கள்.
இதுவரை மூன்று பாடல்கள் கொடுத்திருக்கிறார் இமான். அத்தனை பாடல்களும் அற்புதம் என்கிறார்கள். லயித்துவிட்ட அல்டிமேட் ஸ்டார் அஜித் அப்படியே இமானை கட்டிப்பிடித்து “அடுத்த படமும் நீங்கதான் பண்ணனும்”என்று சொல்லி விட்டார்.
ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூருக்காக அஜித் நடிக்கும் படத்துக்கான ஒப்பந்தத்தில் இமான் கையெழுத்திட்டிருக்கிறார் .விசுவாசம் இரண்டு முடிந்ததும் போனிகபூர் படம்தான்!