‘புரளி மன்னர்’ என்கிறார்கள். சிலர் ‘ புளுகர்’ என்கிறார்கள். இன்னும் சிலர் ‘அமெரிக்க ஏஜண்ட்’ என்கிறார்கள்.
யார் சொல்வது உண்மை என்பது புரியாமல், அவ்வளவு ஏன் அவரைப்பற்றியே தெரியாமல் குடத்துக்குள் தவளையாக இருக்கிறான் தமிழன்!
அவர் சொல்கிற ஜோசியம் சில நேரங்களில் பலிக்கிறது என ஆட்சியில் இருந்த சிலர் சொன்னார்கள். ஆனால் அவர்களும் இன்று சுப்பிரமணியன் சுவாமியா விரட்டுங்கள் என விரக்தியில் இருக்கிறார்கள்.
ஆனாலும் சுப்பிரமணியன் சுவாமி கெத்து விடாமல் “யோவ் தமிழ்ஸ்! நான் நாயக்க மன்னர்களுக்கு தளகர்த்தராக இருந்த ( ?) ராஜப்ப அய்யர் வம்சமாக்கும்” என ஓலை அனுப்பி இருக்கிறார்.
“பாண்டிய, சோழ வீரர்கள் வாழ்ந்த பூமியாக ஒரு காலத்தில் தமிழ்நாடு இருந்தது! எனது மூதாதையர் ராஜப்ப அய்யர் மன்னர் திருமலை நாயக்க அரசில் தலைமை தளகர்த்தராக இருந்தவர், ஆனால் ஆங்கிலேயரால் தமிழர்கள் குமாஸ்தாக்களாக மாற்றம் அடைந்தார்கள்.
ஆனால் இன்றோ?
முதுகெலும்பு இல்லாத தமிழர்களாக பொறுக்கிகளுக்கு அடிமையாக சினிமா மாற்றி இருக்கிறது” என்கிறது அந்த ஓலை !
அவர் சொல்ல பயந்து அந்த பொறுக்கிகளின் பெயரை விட்டு விட்டாரா என்பது தெரியவில்லை. முன்னர் உலகநாயகன் கமலிடம் மோதியவர் இப்போது ரஜினி,விஜய்யுடன் மோதுகிறாரோ என்கிற சந்தேகம் வந்திருக்கிறது.
எதற்கு சுவாமி இந்த பூடக விளையாட்டு? பொறுக்கிகளின் பெயரை சொல்லி விடுங்களேன்!