கட்சி ஆரம்பித்து மக்களை சந்தித்து வெற்றி பெற்றாலும் பெற்று விடலாம் ,இந்த தமிழ் ராக்கர்ஸை எதிர்த்து வெற்றி பெறுவதற்குள் கண்ணாம்முழி பிதுங்கி வெளிவந்து விடும் போலிருக்கிறது.
கடந்த மாதம்தான் ஒரு வதந்தி உலா வந்து வாடி வதங்கியது !
தனுஷின் உண்டர்பார் நிறுவனத்தின் பெரிய பட்ஜெட் படம் காலா .உலகம் முழுவதும் நல்ல விலைக்குப் போய் இருக்கிறது.லைக்கா நிறுவனம் அறுபது கோடிக்கு விற்றிருப்பதாக சொல்கிறார்கள். இவ்வளவு பெரிய தொகையை பெற்று இருக்கிற நிறுவனத்துக்குத் தான் தமிழ் ராக்கர்ஸ் சவால் விட்டிருக்கிறது.
“முதல் நாள் முதல் ஷோ வுக்கு முன்னாடியே நாங்கள் வெளியிடுவோம்” என்கிறது.
என்னங்க நடக்கிது நாட்டில?
தமிழ் ராக்கர்ஸை ஒடுக்கவே முடியாதா?