ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இப்போது இயக்கி வரும் ‘2.0’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து கிராபிக்ஸ் காட்சிகள் வடிவமைக்கும் பணிகள் கணினி பொறியாளர்களால் இரவு பகலாக நடந்து வருகிறது. இப்படம் வெளியானதும் ,உலகநாயகன் நடிப்பில் ‘இந்தியன்-2’ ம பாகத்தின் வேலைகளை ஷங்கர் தொடங்கவிருக்கிறார். இந்நிலையில் இந்த படத்திற்கு இசை அமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்திற்கு இசை அமைக்கும் அனிருத், இந்த படத்தின் மூலம் உலகநாயகன் கமல்ஹாசனுடனும் முதன் முறையாக இணைகிறார்.இதையடுத்து அனிருத்துக்கு ரஜினி, கமல் படங்களுக்கு ஒரே நேரத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்துள்ளது!