டார்லிங் படத்தின் மூலம் ஜி.வி.பிரகாஷை கதாநாயகனாக அறிமுகப்படுத்திய இயக்குனர் சாம் ஆண்டன், தற்போது தனது மூன்றாவது படமாக, அதர்வா கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு’100′ என தலைப்பிடப்பட்டுள்ளது. சாம்.சி.எஸ்.இசை அமைக்கிறார். இதில் அதர்வா போலீஸ்காரராக நடிக்கிறார். ஆக்சன் திரில்லர் படமாக உருவாகி வரும் இதில் அதர்வாவிற்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார்.மேலும் இதில் முக்கிய வேடத்தில் ‘எரும சாணி ‘ஹரிஜா,யோகிபாபு ஆகியோரும் நடிக்கின்றனர் .