“கண்ணாடியில பவர் போயிருச்சு, கிளாஸ் மாத்திக்கொடு!.பிக்பாஸ்ல ஓவியாவா ,ஜூலியாவான்னு தெளிவா தெரியலப்பா” என்று பிள்ளைகளின் வருமானத்தை தேய்த்த சீனியர் சிட்டிசன்ஸ் இந்த வருஷமும் அலெர்ட் ஆறுமுகமாகி விட்டார்கள். கண்ணிலேயே லென்ஸ் வச்சாச்சு! நம்ம கண் டாக்டர் விஜய சங்கரிடம் இந்த வருஷம் எத்தனை பேருக்கு லென்ஸ் மாட்டினிங்கன்னு ஒரு புள்ளி விவரம் வாங்கனும்!”
சினிமாவுக்கு இல்லாத மவுஸ் பிக்பாஸ்க்கு !
குஞ்சு குளுவானிலிருந்து கூன் விழுந்த தாத்தா வரை பிக்பாஸ் ரசிகர்கள் ஆகி இருக்கிறார்கள். இப்போது அடுத்த சீசன் ஆரம்பமாகி விட்டது.செவெண்டி எம் எம் .தியேட்டரை விட குட்டியான டிவியே போதுமானதாகிவிட்டது. இரண்டாவது சீசனுக்கும் உலக நாயகன்தான்!
கமலுக்கு பிக்பாஸ் என்றால் மோகன்லாலுக்கு ‘லால் சலாம்’ டி.வி .நிகழ்ச்சிதான்.ஆந்திராவில் சிரஞ்சீவிக்கு ‘மீலு எவரு கோடீஸ்வரடு’. தற்போது இந்த வரிசையில் விஷாலும் சேர்ந்திருக்கிறார்.லட்சுமி மஞ்சு ஸ்டைலில் ஒரு நிகழ்ச்சியை நடத்தப்போகிறாராம். கர்நாடகா நீங்கலாக மினி திராவிடம் டி.வி.யில் !
“சினிமான்னா டிக்கெட் வாங்கிட்டு ஜனங்க தியேட்டருக்கு வருவாங்க. ஆனா டி.வி.பெட்டின்னா ஜனங்களை திருப்தி படுத்தியாகனும். பெரிய அளவில் மக்களை சென்றடையும்” என்று முன்னர் கமல் கூறி இருந்தார்.