தன்னை விட ‘பெட்டர் ஹால்ப் ‘ பரிசுகள்,பாராட்டுகள் என வாங்கிக் குவிக்கிற போது கணவனின் மனதில் ஒரு ஓரத்தில் நமக்கும் இப்படி வாய்ப்புகள் அமையவில்லையே என்கிற வருத்தம் இருக்கும்! அப்போது விடுவான் பாருங்கள் பெருமூச்சு! பத்து பலூன்களை ஊதி விடலாம். விஜய் டி.வி.நடத்திய விருதுகள் விழாவில் லேடி சூப்பர் ஸ்டார் நயனுக்கு இரண்டு விருதுகள்.
காதலனிடம் காட்டிப் பெருமைப்பட்டு படமும் எடுத்துக்கொண்டார் நயன்.
காதலர் விக்கியின் மைன்ட் வாய்ஸ் இனி!
“நாம்ம எப்ப இப்படி அவார்டுகளை வாங்கி இந்த புள்ள கிட்ட காட்டப் போறோமோ?”
மிஸ்டர் விக்கி.! உமக்கு நயன் தாராவை விட வேற பெரிய விருது என்ன இருக்குவோய்