“காதலில் உறவினில், கலைகளில் உணவினில்
ஈதலில் ,புரத்தலில்,இயற்கையை ரசித்தலில்
வாழ்தலில் பற்று வை,வாழ்க்கையைக் கற்று வை “ என்பது கவியரசு கண்ணதாசனின் கர்ப்பூர வரிகளாகும். நிலைத்த புகலை நிலை நிறுத்தும் வேலை கடவுளிடம் இல்லை. அது மனிதனிடம் இருக்கிறது என்பார்.
அந்த வரிகளை வார்த்தெடுத்து வாழ்ந்து வருவது சூர்யாசிவகுமாரின் குடும்பமாகும்.
“கணவனாக சூர்யா ,எப்படிப் போகிறது இல்வாழ்க்கை?”
“ ஞாயிற்றுக் கிழமைகளில் நோ ஷூட்டிங். மற்றபடி காலையில் ‘ஜிம்’ வேலைகள்! முடிந்ததும் கிளம்பிவிடுவார், ஈவ்னிங் வீடு திரும்பியதும் தூங்கச் செல்லும் வரை குடும்ப வேலைகள்தான்!
முக்கியமான பள்ளி நிகழ்ச்சிகளுக்குச் செல்ல தவற மாட்டார். முன்னதாகவே டைரியில் குறித்துக் கொண்டு விடுவார்.ஒரு நிகழ்ச்சிகளைக் கூட மிஸ் பண்ணியதில்லை.குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதில் அவர் பெர்பெக்ட் டாட்,” என்கிறார் ஜோ.
“நீங்கள் நடித்த படங்களை அவர்களுக்கு காட்டுவது உண்டா?”
“ஒன்றிரண்டு பார்த்திருக்கிறார்கள்.மற்றபடி நாங்கள் சூர்யா ஜோதிகா என்பதை விட அப்பா, அம்மா !”