தமிழர்கள் இடிதாங்கிகள். இழுத்து வைத்து கும்மினாலும் துடைத்து விட்டு “நல்லாருங்க!”என்று சொல்கிற நல்ல டைப்!
ஜூலியை கதாநாயகியாக பார்க்கிற வாய்ப்பு கிடைத்திருக்கிறதே! கொடுத்து வைத்தவர்கள்.
இவருக்காகவே ‘ அம்மன் தாயி’என்கிற பக்திப் படத்தை மகேஸ்வரன்-சந்திரஹாசன் ஆகியோர் எடுத்திருக்கிறார்கள். கதாநாயகனாக அன்பு என்கிற பாடி பில்டர் அறிமுகம் ஆகியிருக்கிறார்.
“எப்படிங்க ஜூலியை அம்மன் பக்தையாக மாத்துனிங்க,?”
“தமிழ்ப்பொண்ணு.பிக்பாஸ்ல பேமஸ். அம்மன் படத்துக்கான கண்ணு. இதெல்லாம் ப்ளஸ் தானே! முளைப்பாரி எடுத்து ஆடுறது, பின் கொசுவம் கட்டி கிராமத்துப் பொண்ணாக நடிக்கிறது இதெல்லாம் மண் சார்ந்த சமாச்சாரங்கள் .அது ஜூலியிடம் இருக்கு !அதனால நடிக்க வெச்சோம்” என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.