தி ரிஷா- வருண் மணியன் திருமணம் ஏன் நின்றது ?என்ற செய்தி தான் தற்போது கோடம்பாக்கத்தின் முக்கிய செய்தியாக உள்ளது. மேலும் மீண்டும் ராணா-திரிஷா இடையே மீண்டும் காதல் ஏற்பட்டுள்ளது என்றும் ,வருன்மணியனுடனான திருமண முறிவுக்குதிரிஷா தான் காரணமா என்பது குறித்தும் பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து முதன்முறையாக த்ரிஷாவின் அம்மா உமா மனம் திறந்துள்ளார். “உண்மையில் த்ரிஷாவின் கல்யாணம் நின்றதுக்கு காரணம் வருண்மணியன் கிடையாது. கல்யாணம் ஆன பிறகும் நீ நடி என்று முதலில் சொல்லியவர் தான் வருண். இந்த திருமணம் நின்றதில் சில குடும்ப பெரியவர்கள் சமந்தப்பட்டுள்ளனர். அதனால் தான் இது நாள் வரை நாங்கள் எதுவும் சொல்லாமல் இருந்தோம், காரணம் அவர்களின் மனம் பாதிக்கும்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். எது எப்படியோ , திரிஷா மறுபடியும் செல்வராகவன், கமல், ஜெயம் ரவி போன்ற பல பெரிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். தயவு செய்து எங்கள் மனம் புண்படும்படி மீடியாக்கள் எதுவும் செய்தி வெளியிட வேண்டாம்! என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்!