“ஜுங்கா படத்தில் முழுக்க என்னோட ‘போர்ஷன்’ பாரிஸ் ,ஆஸ்திரியா, ஜார்ஜியாவில்தான் ஷூட் பண்ணினாங்க. இந்தியாவில் ஒரே ஒருநாள் மட்டும்தான் ! அப்படின்னா என்னோட கேரக்டர் எவ்வளவு மாடர்னா இருக்குன்னு தெரிஞ்சிக்கலாம் “என குத்தாட்டம் போடாதது மட்டுமே பாக்கி. எல்லோரிடமும் உற்சாகமாக பேசுகிறார் சாயிஷா!
“தளபதி விஜய் படமா அடுத்தது?”
“அப்படித்தான் நானும் படிச்சேன். அப்படி யாரும் என்னை கேட்கலை. சூர்யா சார் பட விஷயத்தில் கூட நான் எதுவும் சொல்ல முடியாது “என்கிறார்.
“ஆள் ரொம்பவும் கும்முன்னு இருக்கிங்களே?”
“எல்லாம் பயிற்சிதான் காரணம். ஷூட்டிங் இல்லேன்னா டான்ஸ் பயிற்சி.கடுமையா ஆடுவேன். ஷூட்டிங் இருந்தா பார்ட்டி பைவ் மினுட்ஸ் ஒர்க் அவுட் இருக்கும்.அவ்வளவுதான். வஞ்சகம் இல்லாமல் பிரியாணி சாப்பிடுவேன்.நான்-வெஜ் பிரியை” என்கிறார்.
அப்ப டெய்லி மெனுவில் சிக்கன்,பிஷ் மட்டனுக்கு குறை இருக்காது.