பிக்பாஸ் முதல் பதிவில் பல கொடூரங்களை தாங்கிக்கொண்டாலும் கூடவே மருத்துவ முத்தமும் ஆறுதலாக இருந்தது. பொய் ,புறம் பேசுதல் ,போட்டுக்கொடுத்தல்,இன்னும் பல அராஜகங்களை ரசிக்க முடிந்தது. சீரியல் அறுவைகளை பார்த்த கண்களுக்கு ஒரு வகையில் ஆறுதலாகவும் இருந்தது. தமிழ்த் தொலைக்காட்சிகளில் சில தொடர்கள் ரணமாக்கிவிடுகின்றன!
இப்போது பிக்பாஸ் 2 ஞாயிற்றுக்கிழமை முதல்.!
ஆரவ் ,ஓவியா இல்லாவிட்டாலும் உலகநாயகனின் செலக்சன் சோடையாகிப் போகாது என்று நம்பலாம். ஏடாகூட கவிஞர்கள் இருந்தால் ‘ரணமே நல்லது என்று சீரியல் பக்கம் போய்விடுவார்கள்.
வைகாசி முடிந்து ஆனி பிறந்திருக்கிற நேரத்தில் வருகிற பிக்பாஸ் நம் ஆணி அடிக்க மாட்டார் என நம்புவோமாக.
கேள்விப்பட்ட செய்தி பொய்யோ உண்மையோ தெரியாது.
இருட்டு அறையில் முரட்டுக்குத்து யாசிகா ஆனந்த் இருப்பதாகச் சொல்கிறார்கள். வெளிச்சமான அறையிலும் ஓங்கிக் குத்துகிற பெண்தான் அவர்!தைரியசாலிப் பெண். அந்தக்காலத்து நாடகங்களில் பபூன் கழுகுமலை சுப்பையா, கங்காபாய் காமடி இருக்கிறது என்றால் கூட்டு வண்டி கட்டிக்கொண்டு வருவார்கள்.அந்த அளவுக்கு டபிள் மீனிங் .
அதைப்போல யாசிகாவுக்கும் தனி பட்டாளம் உண்டு. யாசிகா ஆர்மி உருவாகலாம்