பிக்பாஸ் சீசன் (2), 17-ம் தேதி இரவு 7 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. தொடக்க விழாவில் கமல் கலந்து கொண்டு, போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வீட்டிற்குள் அனுப்பி வைப்பார். இதற்கான பிரம்மாண்ட விழா இன்று நடைபெற இருக்கிறது.இன்றைய படப்பிடிப்பின் போது தான் போட்டியாளர்களுக்கும் தங்களுடன் ஒரே வீட்டில் வசிக்கப் போகும் சக போட்டியாளர்கள் பற்றியவிவரம் தெரிய வரும்.
இதுவரை வந்துள்ள உறுதியான தகவல்களின் அடிப்படையில் பிக்பாஸ் போட்டியாளர்களின் பட்டியலை தொகுத்துள்ளோம். இதோ..
1. யாஷிகா ஆனந்த்,2. ஆனந்த் வைத்தியனாதன்,3. தாடி பாலாஜி,4. நித்யா தாடி பாலாஜி,5. ஜனனி ஐயர்,6. சுமார் மூஞ்சி குமாரு டேனியல்,7. பொன்னம்பலம்,8. ஐஸ்வர்யா தத்தா,9. மமதி சாரி,10. மஹத்,11. மும்தாஜ்,12. பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன்,13. டேனியல் பாலாஜி,14. பரத் ஆகியோர் தானாம்.இந்த பட்டியலின்எண்ணிக்கை வரும் நாட்களில் அதிகரிக்கலாம் என்கிறார்கள்.