விஜய் வசந்த் நடிக்க, ரஞ்சன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் “ மை டியர் லிசா ”. திகில் படமாக உருவாகிக் கொண்டிருக்கும் மை டியர் லிசா படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் விறு விறுப்பாக நடை பெற்றுக் கொண்டிருந்தது,விஜய் வசந்த் ரவுடிகளுடன் மோதும் சண்டை காட்சி படமாகிக் கொண்டிருந்தது அப்போது எதிர்பாராத விதமாக அவரது கால் பள்ளத்தில் சிக்கியதால் தடுமாறி கீழே விழுந்தார்.அவரது கால் மீது முழு உடம்பும் அழுத்தியதால் கால் முறிந்தது.படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு,உடனடியாக ஊட்டியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். உடனடியாக சிகிச்சை அளிக்கப் பட்டது. அவரது காலில் முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து 3 வாரம் சிகிச்சை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டதை தொடர்ந்து வீட்டில் சிகிச்சை அளிக்கப் படுகிறது.படப்பிடிப்பும் ஒரு மாதம் தள்ளி வைக்கப் பட்டிருக்கிறது.